ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, தொடர்ந்து பிராணவாயு சிகிச்சையில் உள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் குறுகிய காலத்தில் விஸ்லரூப வளர்ச்சி அடைந்த ஐபிஎல், ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் ரசிகர்களால் சுமார் 2 மாதங்கள் கொண்டாடப்படும் திருவிழா. அந்த ஐபிஎல்லுக்கு அடித்தளமிட்டவர் லலித்மோடி. நிறுவனர், முதல் தலைவர் என ஐபிஎல் வரலாற்றில் முக்கிய அங்கம் வகித்தவர் லலித் மோடி. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைதலைவராகவும் இருந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் ஐபிஎல் தொடர்பான காண்டிராக்ட்களை ஒதுக்கியதில் முறைகோடு, அந்நியச் செலவாணி மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகளிலும், வழக்குகளிலும் சிக்கினார். இந்த பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க லண்டனுக்கு தப்பிச் சென்றதாக குற்றச்சாட்டுக்களில் சிக்கினார் லலித் மோடி.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, எனது துணையான சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை தொடங்குகிறேன். சுஷ்மிதா சென்னை காதலிக்கிறேன். அதே நேரத்தில் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. விரைவில் திருமணம் நடைபெறும் என்று பகிர்ந்து இருந்தார்
இந்நிலையில், லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும், 24 மணிநேரமும் பிராணவாயு சிகிச்சை எடுத்து கொள்கிறேன் என்றும் தனது சமூக ஊடகத்தில் அவர் தெரிவித்து உள்ளார். 2 வாரங்களில் இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டது என்றும் ஆழ்ந்த நிம்மோனியா பாதிப்பும் காணப்படுகிறது என அவர் தெரிவித்து உள்ளார்.
3 வாரங்களில் அவர் மெக்சிகோ நாட்டிலும், பின்னர் இங்கிலாந்தின் லண்டன் நகரிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்காக 2 மருத்துவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்து கொண்டார். அவர்கள் உதவியுடனும், தனது மகனின் ஆதரவுடன் லண்டனுக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு உள்ளார்.