மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தடையை மீறி புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்ட நடிகையால் சர்ச்சை எழுந்துள்ளது. சினிமா பிரபலங்களுக்கு மட்டும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கும் கோவில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இரவு கிழக்கு கோபுர வாசல் அருகேயுள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் தீ் விபத்து ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தீ விபத்து ஏற்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போதும் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே கோவில் பாதுகாப்பு கருதி பக்தர்கள் செல்போன் எடுத்துசெல்ல தடை விதிக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வெளியில் உள்ள செல்போன்களை பாதுகாப்பு அறையில் வைத்து செல்கின்றனர். உயர்நீதிமன்ற உத்தரவை காரணம்காட்டி தொடர்ச்சியாக கோவிலுக்குள் செய்தி எடுப்பதற்கு ஊடகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொடர்ச்சியாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் சினிமா பிரபலங்களை சோதனை செய்யாமலே நேரடி வழியில் அனுப்புவதால் அவர்கள் கோவிலுக்குள் செல்போனை பயன்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தவண்ணம் உள்ளது.
இதனை நிருபிக்கும் வகையில் கடந்த வாரம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற `வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் கதாநாயகி சித்தி இட்னானி கோவில் வளாகத்தில் சாமி தரிசனம் மற்றும் தியானம் செய்வது போன்ற புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகமும், காவல்துறையினரும் பக்தர்களை கடும் சோதனைக்கு உட்படுத்தும் நிலையில் சினிமா பிரபலங்களிடம் எந்த சோதனையும் செய்யாமல் கோவிலுக்குள் வளாகத்திற்குள் அனுப்புவதால் இதுபோன்ற சர்ச்சை ஏற்பட்டு வருகிறது.
நடிகை சித்தி இட்னானி அவரது இன்ஸ்டாகிராம் சமூகவலைதள பக்கத்தில் புகைப்படத்தின் கீழ் வரும் கமெண்டுகளில் கோவிலுக்கு எப்படி புகைப்படம் எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பியதை தொடர்ந்து அந்த புகைப்பட பதிவை நீக்கியுள்ளது குறிப்பிடதக்கது.