கடந்த மாதம் அதிகளவில் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகளில் நம்பர் ஒன்இடத்தை டெலிகிராம் பெற்றுள்ளது.
சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் தங்களது தனியுரிமை கொள்கையில் சில மாற்றங்களை கொண்டு வரப்போவதாக அறிவித்தது. அத்துடன் அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மொபைலில் இனி வாட்ஸ் அப் செயல்படாது என அறிவித்தது. இது பயனர்களிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. இதனால், சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளுக்கு பல பயனர்களும் மாறத்தொடங்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், செயலிகள் பதிவிறக்கத்தை கண்காணிக்கும் சென்சார் டவர் என்ற அமைப்பு கடந்த மாதம் அதிகளவில் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதுவெளியிட்டுள்ள தகவலின்படி, டெலிகிராம் செயலியானது கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 6 கோடியே 30 லட்சம் டவுன்லோடுகளை பெற்றுள்ளது. இதில் அதிகப்படியாக இந்தியாவில் 24 சதவிதமும், இந்தோனேசியாவில் 10 சதவீதமும் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது.