இந்தியா செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனில் சம்பளம் கட்..

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனில் அவர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படமாட்டாது என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது நாடு முழுவதும் கோவாக்சின், கோவிட்ஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. முதற்கட்டமாக மருத்துவபணியாளர்கள், சுகாதராப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்ட ஆட்சியர் பவானி சங்கர் சயானி, எஸ்.சி.பி மருத்துவக் கல்லூரி, மாநகராட்சி ஆணையர், மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி, பொது சுகாதாரத்துறை அதிகாரி, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், ‘கட்டாக் மாவட்டத்தில்தான் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவில் உள்ளது. இது வருந்தத்தக்க விஷயம். எனவே அனைத்து தரப்பினரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். குறிப்பாக சுகாதரத்துறை அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் கொரோனா தடுப்பூசியை வரும் 10ம் தேதிக்குள் போட்டுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களின் சம்பளம்/படி/ஊக்கத்தொகையை நிறுத்தி வைக்க வேண்டும்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதம் கட்டாக் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கடிதம் குறித்து தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் பவானி சங்கர் சயானி, “ஒரு மருந்து பாட்டிலில் 4 பேருக்கான மருந்து அடைக்கப்பட்டுள்ளது. ஒரு மருந்து மாட்டிலை உடைத்துவிட்டால் அதை 4 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்த முடியாது. குறைந்த அளவிலான நபர்களே தற்போது தடுப்பு மருந்து எடுத்து வருவதால் பல மருந்து பாட்டிகள் வீணாகி குப்பைக்கு செல்கின்றன. நான் வெளியிட்டுள்ள இந்த கடிதமானது அதிகளவில் மக்களை தடுப்பூசி போட வர ஊக்குவிக்கும் ஒரு மாற்று வழியாகும்” என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

மத்திய அரசால் தமிழகம் முன்னேறுகிறது: முதல்வர்

எல்.ரேணுகாதேவி

பத்ம விபூஷன் விருதுபெற்ற சோலி சொராப்ஜி கொரோனாவால் மரணம்: பிரதமர் இரங்கல்

Halley karthi

திறக்கப்பட்டது தாஜ்மஹால்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Vandhana

Leave a Reply