பாலியல் புகார் | நடன இயக்குநர் #JohnnyMaster -க்கு ஜாமீன்

பாலியல் புகாரில் கைதான நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய பிரபல டான்ஸ் மாஸ்டர்…

Telangana High Court , bail , arrested ,choreographer, Johnny Master , sex complaint

பாலியல் புகாரில் கைதான நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷா தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் பெண் நடனக் கலைஞர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.

முதலில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை எனக்கூறிய ஜானி மாஸ்டர் பின் குற்றத்தை ஒப்புக்கொண்டது ஒட்டுமொத்த திரை உலகையும் உலுக்கியது. அந்தப் பெண் மைனராக இருக்கும்போதிலிருந்தே அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததால் ஜானி மாஸ்டர் மீது ஐபிசி (இந்திய குற்றவியல் சட்டம்) 376, 506 மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு சாரளப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, பிணை கேட்டு அவர் அளித்த மனு தள்ளுபடியானது.

இதையும் படியுங்கள் : “தமிழ்நாட்டுக்கு பொக்கிஷம் கிடைக்க வேண்டும்” – தவெக தலைவர் #Vijay -ன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி!

இந்த நிலையில், இன்று தெலங்கானா உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதனால், நாளை (அக்.25) சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிணையில் வெளியே வரும் ஜானி மாஸ்டர், புகார் அளித்த பெண்ணிற்கு எந்தத் தொந்தரவோ, அழுத்தத்தையோ தரக்கூடாது என நீதிமன்றம நிபந்தனை அளித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.