‘கேஜிஎஃப்’ படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் டீசர் வரும் ஜூலை 6-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாக நடிக்கும் சலாம் படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இந்தப் படம் வெளியாகவுள்ளது. வருகிற செப்டம்பர் 28ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து படப்பிடிப்பு தளத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமான அளவில் தயாரித்துள்ளது.
https://twitter.com/hombalefilms/status/1675772647786037248
இப்படம் ’கேஜிஎஃப்’ யுனிவர்ஸின் ஓர் அங்கமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதனால், இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டீசர் வரும் 6-ம் தேதி அதிகாலை 5.12 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.







