சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 1000 மேனேஜர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://www.centralbankofindia.co.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.07.2023
இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் அறிவிப்பாணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ஆண், பெண் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 31.05.2023 தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு தளர்வுகள் வங்கியின் நிபந்தனைகளின் படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா பேங்கின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.centralbankofindia.co.in/ இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.







