முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

தனுஷின் நானே வருவேன் படத்தின் டீசர் நாளை வெளியீடு

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த “நானே வருவேன்” திரைப்படத்தின் டீசர் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாறன், திருசிற்றம்பலம் திரைப்படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன். செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் இந்த படத்தில் எல்லி அவரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்த நிலையில், அரவிந்த் கிருஷ்ணா படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்ளவுள்ளார். மேலும் கலைப்புலி எஸ் தாணு படத்தை தயாரிக்கவுள்ளார்.

புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் தனுஷ் -செல்வராகவன் கூட்டணி சிறப்பாக அமைந்த நிலையில் தற்போது நானே வருவேன் படத்திற்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியானது. இதனை கலைப்புலி எஸ்.தாணு தனது சமூக வலைதளப்பக்கத்தில் “எண்ணியது எண்ணியபடி, சொன்னது சொல்லியபடி” செப்டம்பர் மாதம் வெளியீடு என தெரிவித்துள்ளார்.

நீங்கள் ஆவலுடன் காத்திருந்த “நானே வருவேன்” படத்தின் டீசர் நாளை வெளியிடப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

 

அ.மாரித்தங்கம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு

G SaravanaKumar

மதுரையில் குழந்தை விற்கப்பட்ட விவகாரம்; 4 பேர் கைது

G SaravanaKumar

339 கிலோ எடையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு சாக்லெட் சிலை!

Saravana