முக்கியச் செய்திகள் தமிழகம்

4வது நாளாக தொடரும் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னையில் 4-வது நாளாக ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில், 2009ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், இதற்கு முந்தையை மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், குடும்பத்துடன் கடந்த 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த போராட்டம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது. இந்த நிலையில் நேற்று போராட்டக்குழுவினருடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. எனவே போராட்டம் தொடர்கிறது.

போராட்டத்தில் நேற்று வரை சுமார் 69 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்தனர். இன்று காலை 10 பேர் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். கல்வித்துறை அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம். கிடைக்காத பட்சத்தில் எங்களது போராட்டம் தொடரும் என போராட்ட ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தோனி வழக்கு

EZHILARASAN D

“வக்கீல் சாப்” திரைப்படத்தின் ட்ரைலருக்கு முந்தியடித்த ரசிகர்கள்!

Jeba Arul Robinson

ஒரு சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும்; ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

EZHILARASAN D