பெண்களுக்கு எதிரான வன்முறை; விழிப்புணர்வு மணற்சிற்பத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்கான 181 மகளிர் உதவி மையத்திற்கான விழிப்புணர்வு மணற்சிற்பத்தை மெரினா கடற்கரையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை காமராஜர் சாலை, விவேகானந்தர் இல்லம் எதிரில்,…

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்கான 181 மகளிர் உதவி மையத்திற்கான விழிப்புணர்வு மணற்சிற்பத்தை மெரினா கடற்கரையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை காமராஜர் சாலை, விவேகானந்தர் இல்லம் எதிரில், மெரினா கடற்கரையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழக அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து, பெண்களுக்கு இடர் இல்லா சமுதாயத்தை உருவாக்குவோம்.. பெண்களின் பாதுகாப்பிற்கான அனைவரும் உறுதியேற்போம் என வாசகங்கள் அடங்கிய பலகையில் கையெழுத்திட்டார்.இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கீதாஜீவன்,கே.என்.நேரு, பொன்முடி மற்றும் சென்னை
மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் உட்பட பல்வேறு அதிகாரிகளும் கலந்து
கொண்டனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தையொட்டி 181 மகளிர்‌ உதவி மையம்‌ சார்பில், ’பெண்ணியம்‌ போற்றுவோம்‌ 2022’‌ என்ற நிகழ்ச்சியானது நவம்பர்‌ 25 முதல்‌ டிசம்பர்‌ 10 வரை நடத்தப்பட்டன. இந்த நிலையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பமானது வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த மணற்சிற்பத்தை 6 டன் மணல் மற்றும் 1000 லிட்டர் தண்ணீர் உதவியுடன் 7 நபர்கள் கொண்ட குழுவினர் இரண்டு நாட்களில் உருவாக்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.