பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழப்பு | #Erode -ல் சோகம்

அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி சுண்டப்பூர் மலைகிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்…

அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி சுண்டப்பூர் மலை
கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அந்தோணி ஜெரால்ட் (49) என்பவர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்தார். வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு வந்தவர் மதிய உணவு அருந்திவிட்டு வகுப்பு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.

தொடர்ந்து அங்கிருந்து நாற்காலியில் அமர்ந்த அவர், மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்த மற்ற ஆசிரியர்கள் அவரை மீட்டு காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதற்கிடையில் 108 ஆம்புலன்ஸ்க்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது
எதிரே வந்த 108 ஆம்புலன்ஸ் ஆசிரியர் அந்தோணி ஜெரால்டை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையும் படியுங்கள் : ராஜஸ்தான் தேசியப் பூங்காவில் 25 புலிகளைக் காணவில்லை | அதிர்ச்சித் தகவல்!

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் காவல்துறையினர் உயிரிழந்த ஆசிரியரின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து விசாரண மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பில் உயரிழந்த சம்பவம் ஆசிரியர்கள்
மற்றும் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.