தமிழ்நாட்டில் பொது ஊரடங்கு தளர்வு அளிக்கபட்ட 27 மாவட்டங்களில் இன்று முதல் தேநீர் கடைகளை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார் .
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து, இதர 27 மாவட்டங்களில், இன்று தேநீர்க் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை, பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேநீர் வாங்க வரும் பொதுமக்கள், பாத்திரங்களை கொண்டு வந்து பெற்றுச் செல்லுமாறும், நெகிழி பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேநீர் கடைகளின் அருகே நின்று, தேநீர் அருந்த அனுமதி இல்லை, எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளும், காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் நலன் கருதி, அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை பெற இ-சேவை மையங்களும், இன்று முதல் இயங்க அனுமதி வழங்கப்படுவதாகவும்,
கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







