அதிமுக ஆட்சியின் குளறுபடிகள் காரணமாக நகராட்சி வரி வருவாய் தடைபட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு குற்றம் சாட்டி உள்ளார்.
திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நூலகம், கணினி, தையல் பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளதாகக் கூறிய அவர், திருவண்ணாமலை புறவழிச்சாலையில் விரைவில் மத்திய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றார். தமிழ்நாட்டில் நகராட்சிகள் மூலம் கிடைக்கும் வரி வருவாய் தடைபட்டுள்ளது என்று கூறிய அவர், அதற்கு முந்தைய ஆட்சியில் வரிவசூலில் செய்த குளறுபடிகளே காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் மனுக்கள் இன்னும் பெறப்பட்டு வருவதாகவும், இதற்கு கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், பொதுமக்களிடம் தொடர்ந்து மனுக்கள் பெறப்படும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: