22 மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது: மத்திய அரசு

நாடு முழுவதும்  22 மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா 2வது அலை தொடங்கியது. ஆக்சிஜன்…

நாடு முழுவதும்  22 மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா 2வது அலை தொடங்கியது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவதியடைந்தனர். எனினும், ஜூன் மாத தொடக்கத்திற்குப் பிறகு கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. தற்போது, கொரோனா 3வது அலையை எதிர்கொள்வதற்கான பணிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் நேற்று வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு  132 நாட்களுக்கு பிறகு 30 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் 62 மாவட்டங்களில் மட்டுமே தினசரி கொரோனா பாதிப்பு 100க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது என்றும் 7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா பரவல் என்பது சற்று அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக கேரளாவைப் பொறுத்தவரை 7 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது எனவும் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 97.4 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.