கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை, இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார்.
கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்த எடியூரப்பா இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு பசவராஜ் பொம்மை கர்நாடகாவின் 23வது முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், வி.பி.சிங் தொடங்கிய ஜனதா தளத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த எஸ்.ஆர். பொம்மையின் மகன்தான் பசவராஜ் பொம்மை. கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் 1960ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி பிறந்த பசவராஜ் பொம்மை, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு, டாடா குழுமத்தின் டெல்கோ நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார்.
பின்னர், விவசாயத்தில் கவனம் செலுத்திய அவர், 1990ம் ஆண்டில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து தமது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர், எடியூரப்பாவுடன் இருந்த நட்பின் காரணமாக, கடந்த 2008ம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார் பசவராஜ் பொம்மை.