2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார், அப்போது போசிய அவர், பிரதமரின் இ-வித்யா மூலம் அதிக மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்:
- நிதி சார்ந்த தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதில் டிஜிட்டல் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது .
- தேசிய நெடுஞ்சாலைகள் 25,000 கிலோ மீட்டராக அதிகரிக்கப்படும்
- நாட்டில் ரசாயனம் அற்ற இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்.
- வேளாண் நிலங்களை அளக்க, பயிர் சேதங்களை ஆராய ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.
- ‘பார்வத்மாலா’ திட்டத்தின்கீழ் மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை.
- காவிரி – பெண்ணாறு இணைப்பு திட்டம் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுக்கு பின் நிறைவேற்ற நடவடிக்கை.
- நதிகள் இணைப்பு தொடர்பான 5 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- ட்ரோன் உற்பத்தி சார்ந்த தொழில் தொடங்கும் புதிய நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.
- தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்த அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
- பிரதமரின் இ-வித்யா மூலம் அதிக மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








