வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் பல ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஷோ-காஸ் நோட்டீசை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28% சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி இந்த வரி விதிப்பானது அக்டோபர் 1 முதல் அமலுக்கும் வந்தது. இதன்மூலம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு சட்டத்தின் படி வரி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் செயல்பட்டு வரும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சுமார் ரூ.1 லட்சம் கோடி அளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் தெரிவித்திருந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ட்ரீம்11, கேம்ஸ்கிராஃப்ட் உள்ளிட்ட சில ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கடந்த வாரம், டெல்டா கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.6,384 கோடி குறுகிய கால வரி செலுத்துவதற்கான நோட்டீசை ஜிஎஸ்டி துறையிடம் இருந்து பெற்றது.
இதையும் படியுங்கள் : அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு.!
இந்நிலையில், வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் பல ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஷோ-காஸ் நோட்டீஸ்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.







