முக்கியச் செய்திகள் இந்தியா வணிகம்

ஜனவரி முதல் விலையை ஏற்றுகிறது டாடா மோட்டார்ஸ், டுகாட்டி

ஜனவரி மாதம் முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் டுகாட்டி நிறுவனமும் வாகனங்களின் விலையை அதிகரிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதுபற்றி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், பயணிகள் வாகன வணிகப்பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா கூறும்போது, மூலப் பொருட்கள் மற்றும் பிற இடுபொருட்களின் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. செலவுகளும் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்கள் நிறுவன பயணிகள் வாகங்களின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் முதல் இந்த விலை உயர்த்தப்பட இருக்கிறது. உயர்த்தப்பட இருக்கும் தொகை குறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், சொகுசு மோட்டாா் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி நிறுவனம், வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வகையான பைக் விலையையும் அதிகரிக்க இருப்பதாகக் கூறியுள்ளது.

‘பொருள் உற்பத்தி, தளவாட செலவுகள் அதிகரிப்புக்கு ஏற்ப, விலையை ஏற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், அனைத்து மாடல்களுக்கான விலையையும் அதிகரிக்க உள்ளோம். இந்தியா முழுவதும் உள்ள டுகாட்டி நிறுவனத்தின் 9 டீலர்ஷிப்களிலும் இந்த விலை ஏற்றம் நடைமுறைக்கு வரும்’ என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஓபிஎஸ் 2வது மகன் தேர்தலில் போட்டியிட விருப்பமனு!

Niruban Chakkaaravarthi

50% பயணிகளுடன் நாளை காலை 6 மணி முதல் சென்னையில் பேருந்துகள் இயக்கம்: மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

Halley Karthik

முன்விரோதம் காரணமாக மீனவர் கொலை செய்து புதைப்பு

Saravana Kumar