‘விதிகளில் திருத்தம் கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தடையில்லை’

டாஸ்மாக் கடைகளையொட்டி அமைந்துள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளையொட்டி அமைந்துள்ள அனைத்து பார்களையும் ஆறு…

டாஸ்மாக் கடைகளையொட்டி அமைந்துள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளையொட்டி அமைந்துள்ள அனைத்து பார்களையும் ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு, தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

“சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை வரும் 16-ந்தேதி வரை நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் பிரத்யேக நேரலையாக காணலாம்”

டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைந்துள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளின் அருகில் பார்கள் நடத்த ஏதுவாக விதிகளில் திருத்தம் கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தடையில்லை எனவும் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல் முறையீட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.