தமிழ்நாட்டில் தற்போதைக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இ-வாகன பயன்பாடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வர அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். போக்குவரத்துத்துறைக்காக தனி கட்டுப்பாட்டு அறை அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதற்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் 2 ஆயிரம் பேருந்துகளில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை வரும் 16-ந்தேதி வரை நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் பிரத்யேக நேரலையாக காணலாம்”
போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு பின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் சிவசங்கர், மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்த பட்ட போதிலும், தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் தற்போதைக்கு உயர்த்தப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








