முக்கியச் செய்திகள் விளையாட்டு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி

15வது ஐபிஎல்-ன் இன்றைய, 13-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

15-வது ஐபிஎல்-ன் 13-வது போட்டி மும்பையில் உள்ள வான்கேடே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் களம்கண்டன.

இதற்கு முன்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது. அதில் 66 ரன்கள் வித்தியாசத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது, அதில் 23 ரன்கள் வித்தியாசத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதேபோல, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது. அதில் 6 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 5 விக்கெட்டுகள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிப்பெற்றது. அதனைத்தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது. அதில் 4 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 3 விக்கெட்டுகள் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிப்பெற்றது.

இந்நிலையில், இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 170 ரன்கள் வெற்றி இலக்காக இருந்தது, அதனைத்தொடர்ந்து பேட்டிங்செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 19.1 ஓவர்கள் முடிவில், 173 எடுத்து அபார வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

நீட் தேர்வு: மேலும் ஒரு மாணவி தற்கொலை

Halley Karthik

கனமழை : சென்னையில் 14 விமானங்கள் ரத்து

Halley Karthik

திருமணம் செய்து வைக்கக்கோரி காவல்துறையிடம் உதவி கேட்ட உ.பி. இளைஞர்!

Gayathri Venkatesan