தீபாவளி பண்டிகை: டாஸ்மாக்கில் ரூ.464 கோடிக்கு மது விற்பனை !

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் ரூ.464 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நடந்து முடிந்த நிலையில் பட்டாசு, புத்தாடை, இனிப்பு விற்பனையை காட்டிலும் டாஸ்மாக் மது விற்பனை…

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் ரூ.464 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நடந்து முடிந்த நிலையில் பட்டாசு, புத்தாடை, இனிப்பு விற்பனையை காட்டிலும் டாஸ்மாக் மது விற்பனை பேசு பொருளாக மாறி உள்ளது. கடந்த 2 நாட்களில் தமிழகம் முழுவதும் 467 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்:ரூ.84.5 லட்சத்திற்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு!!

இந்த நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாளான 11 ஆம் தேதி  220.85  கோடி ரூபாய்க்கும்,  தீபாவளி தினத்தன்று மட்டும் 246.78 கோடி ரூபாய்க்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

சராசரியாக நாள் ஒன்றுக்கு 150 கோயே விற்பனையாகும் நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாள் ஒன்றுக்கு 200 கோடியை தாண்டி விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.