டாஸ்மாக் விற்பனை நேரம் மாற்றம்; தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க வேண்டும்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலை பத்து மணி முதல் இரவு எட்டு மணி வரை டாஸ்மாக் கடைகள்…

தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காலை பத்து மணி முதல் இரவு எட்டு மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி விற்பனை நேரத்தை மாற்றி அமைத்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது.

அதன்படி, டாஸ்மாக் கடைகள் நண்பகல் பன்னிரெண்டு மணி முதல் இரவு பத்து மணி வரை செயல்படும். இந்த நிலையில், டாஸ்மாக் நிறுவனம் முன்னறிவிப்பின்றி விற்பனை நேரத்தை மாற்றியுள்ளதாக கூறி, டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் ஆறு வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.