முக்கியச் செய்திகள் குற்றம்

தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக்கொலை; இளைஞர் வெறிச்செயல்

தாம்பரத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டை ராதா நகர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். மாநகர அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் சுவேதா (25) தாம்பரம் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வருகிறார்.

இந்த நிலையில் கல்லூரி அருகே ராமச்சந்திரன் என்பவருடன் சுவேதா நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த ராமச்சந்திரன், சுவேதாவின் கழுத்தில் குத்திக் கொலை செய்ததாக தெரிகிறது. மேலும், தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் ராமச்சந்திரன்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.  சுவேதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு  அவரது உடலைக் கண்ட உறவினர்கள் கதறி அழுதது காண்போரைக் கலங்கச் செய்தது. காதல் பிரச்னையில் கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

மும்பையில் கனமழையில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு

Halley karthi

டீ விற்பனையில் புதிய யுக்தி; மாதந்தோறும் ரூ. 2 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்!

Jayapriya

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒன்றுபடுமாறு 15 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மமதா பானர்ஜி அழைப்பு

Halley karthi