மதுபானம் கிடைக்காததால், போதைக்காக சானிடைசர் குடித்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்செந்தூர் அருகேயுள்ள சன்னதி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மூர்த்தி (38). ஆட்டோ ஓட்டுனரான இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாம் கட்ட அலை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையிலும் கடந்த 10 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் மதுபானம் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் தவித்து வந்தனர். இந்தநிலையில் மூர்த்தி மதுபானம் கிடைக்காமல் சன்னதிதெருவில் உள்ள தனியார் பள்ளி பின்புறம் வைத்து சானிடைசரை குடித்துள்ளர். இதனால் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர் தனது தம்பிக்கு தகவல் தெரிவித்துள்ளார். தம்பி வந்து பார்த்தபோது இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து கோவில் காவல்நிலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த சுந்தர்ராஜ்(45). இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக திருச்செந்தூர் பகுதியில் யாகசம் பெற்று பொழுதை கழித்து வந்தார். ம குடிப்பழக்கத்திற்கு அடியையான இவர் திடிரென அவர் இன்று டி.பி.ரோட்டில் உள்ள பழைய டாஸ்மார்க் கடை வாசலில் இறந்து கிடந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். அதில், போதைக்காக சானிடைசர் குடித்தததால் இறந்தது தெரியவந்தது.