பேப்பர்- பேனா முறையில் மறுதேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு!

பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வு ஆப்லைனில் பேப்பர் – பேனா முறையில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழ்கம் அறிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான 2020 நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றது. அந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த…

பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வு ஆப்லைனில் பேப்பர் – பேனா முறையில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழ்கம் அறிவித்துள்ளது.


பொறியியல் மாணவர்களுக்கான 2020 நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றது. அந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. தேர்வு முடிவில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து மறு தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வு மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்களும், தேர்வில் தோல்வி அடைந்தவர்களும் அதில் எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 


அதன்படி மறு தேர்வானது 3 மணி நேரம் நடக்கும் என்றும், கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் என்ன வினாத்தாள் வடிவமைப்பு பின்பற்றப் பட்டதோ அதேபோல் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மறு தேர்வானது ஆப்லைன், பேப்பர் மற்றும் பேனா முறையிலான தேர்வாக இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில் உள்ள பிற மாநில பல்கலைக்கழகங்கள் பின்பற்றக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே மறு தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


அதேபோல் நடப்பு ஏப்ரல் – மே மாத செமஸ்டர் தேர்வும் ஆப்லைனில், பேப்பர் – பேனா முறையிலேயே நடைபெறும் என்றும், நடப்பு செமஸ்டர் தேர்வுக்கு மாணவர்களின் எண்களை அனைத்து கல்லூரி டீன், முதல்வர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் இதற்கான தேர்வு கட்டுப்பாட்டு இணையதளம் தயாராக இருக்கிறது என்றும், வருகிற 7ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் அதில் நிறைவு செய்ய வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.