முக்கியச் செய்திகள் தமிழகம்

தீபாவளி பண்டிகைக்கு ஆவின் மூலம் ரூ.250 கோடிக்கு இனிப்பு விற்க இலக்கு- அமைச்சர் நாசர்

ஆவின் மூலம் தீபாவளி பண்டிகையின் போது ரூபாய் 200 முதல் 250 கோடி மதிப்பிலான இனிப்புகள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பால்வளத்
துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள ஆவின் கால்நடை தீவன தொழிற்சாலையில் அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிம் பேசிய அமைச்சர்,
தீபாவளி பண்டிகையின் போது தரமான இனிப்புகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய
ஆவின் திட்டமிட்டுள்ளது. இதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் ரூ.53 கோடி
அளவிற்கு தயாரிக்கப்பட்டு அதிலும் 10 டன் இனிப்புகள் வீணாக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்தாண்டு ரூ.85 கோடி மதிப்பிலான இனிப்புகள் விற்பனை
செய்யப்பட்டது. கூட்டுறவு சங்கங்கள் ஆவின் நிறுவனத்தில் இனிப்புகளை வாங்க
அறிவுறுத்தப்பட்டது. நடப்பு ஆண்டு தரமான மூலப் பொருள்களைக் கொண்டு இனிப்புகள்
தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். ஆவின் பால் குறிப்பிட்ட
சதவீதத்தில் எஸ்என்எப்மற்றும் ஃபேட் அளவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு
கொண்டுவரப்படுகின்றன. ஒரு சதவீதம் கூடுதலாக அல்லது குறைவாக இருந்தால் கூட அந்த அந்த பால் நிராகரிக்கப்படும்.விவசாயிகள் கொண்டு வரும் பாலை இந்த தரத்திற்கு ஏற்ப நாங்கள் தயாரிக்கிறோம்.


ஆவின் விற்பனை கூடங்களில் ஆவின் பொருளைத் தவிர வேறு பொருள்கள் விற்கக் கூடாது. இன்று கூட பஜ்ஜி போண்டா விற்பனை செய்ததற்காக இரண்டு கடைகள் விழுப்புரத்தில் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று தஞ்சை கோயம்புத்தூர் சென்னையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த காலத்தில் கட்சிக்காரர்களுக்கு இவ்வாறு கடைகள் ஒதுக்கப்பட்டதால் தவறுகள் நிகழ்கின்றன. அதை களைய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த புகார் சம்பந்தமாக மதுரையை சேர்ந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆவின் கால்நடை தீவனத்தில் ஏதாவது குறை இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். முட்டம் பகுதியிலிருந்து எங்களுக்கு இவ்வாறு புகார் வந்ததை எடுத்து உடனடியாக அதிகாரியிடம் பேசி குறைகள் களையப்பட்டன. ஆவின் நிறுவனத்தில் பணியாளர்கள் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நிவாரண பொருட்களை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

Jeba Arul Robinson

துப்பாக்கிச்சூடு: பாகிஸ்தான் பிரதமர் மீது இம்ரான்கான் சந்தேகம்

Web Editor

இருக்கும் இடத்தை விட்டு…

Web Editor