தமிழ்நாட்டில் இன்று 1,289 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்
மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இன்று 1,289 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 26,80,857 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 15,842 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,37,548 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,87,41,297 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதேபோல இன்று தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 757 பேர் ஆண்கள் மற்றும் 532 பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,421 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 26,29,201 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல 18 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 35,814 ஆக அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில் 164 பேரும், கோவையில் 137 பேரும், செங்கல்பட்டில் 104 பேரும் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.








