முக்கியச் செய்திகள் தமிழகம்

மின் விற்பனை கூடாது; மத்திய அரசு எச்சரிக்கை

வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் வழங்காமல், மின்சாரத்தை விற்பனை செய்யும் முயற்சியில் மாநில மின்வாரியங்கள் ஈடுபடக்கூடாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது. 

நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு மாநிலங்களில் மின் தடை நிலவுகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 மணி நேரம் மின் வெட்டு இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், டெல்லியில் மின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை எனவும் அதனால், தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்காது எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஒரு யூனிட் மின்சாரத்தை 20 ரூபாய் வரை சில மாநில மின்வாரியங்கள் விற்பனை செய்வதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் முடிந்த அளவுக்கு மின்சாரத்தை டெல்லிக்கு வழங்க வேண்டும் என மத்திய மின்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கத் தற்காலிக அனுமதி!

Halley karthi

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்தக் கோரி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கடிதம்!

Halley karthi

பெட்ரோல் விலையில் ரூ.3 குறைத்தது எந்த மாநில அரசும் செய்யாதது: அமைச்சர் ரகுபதி

Ezhilarasan