ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான ஓ மணப்பெண்ணே படத்தின் ட்ரெய்லர் வெளியானது
தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம் பெல்லி சூப்புலு. குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தப்படம் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. படத்திற்கு ஓ மணப்பெண்ணே என பெயரிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் தேவரகொண்டா தருண் பாஸ்கர் ஆகியோர் வெளியிட்டனர். படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் விறுவிறுப்பாக நிறைவடைந்தாலும், கொரோனா அச்சுறுத்தலால், படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்கள் வெளியாகி வந்தாலும், சிறு இயக்குநர்கள் ஓடிடியிலேயே படம் வெளியிட விரும்புகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் லிப்ட் படம் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில், ஓ மணப்பெண்ணே திரைப்படமும் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வரும் 22ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் ட்ரெய்லரை நடிகர் கார்த்தி இன்று மாலை 5 மணிக்கு வெளியிட்டார்.