முக்கியச் செய்திகள் கொரோனா

இன்று ஒரே நாளில் 828 பேருக்கு கொரோனா

இன்று ஒரே நாளில் 828 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை பரவல் ஜூன் மாதத்திற்கு பிறகு தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக 1000க்கு கீழ் என்ற அளவிலேயே பாதிப்பு பதிவாகி வருகிறது. மழைக்காலமான தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று ஒரே நாளில் 828 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,11,584 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 36,247 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து 931 பேர் குணமடைந்தனர். இதுவரை நலம்பெற்று வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 26,65,178 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு 10,159 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட அளவில் சென்னையில் 127 பேருக்கும், கோவையில் 101 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100க்கும் கீழ் என்ற அளவிலேயே பாதிப்பு பதிவாகியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

நள்ளிரவில் நடந்த அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!

Niruban Chakkaaravarthi

’மழை நீர் வடிகால்களை சரியா தூர் வாரலை..’ கான்ட்ராக்டருக்கு எம்.எல்.ஏ கொடுத்த ’தண்டனை!’

Vandhana

புளியந்தோப்பில் தரமற்ற முறையில் கட்டடம்: 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

Gayathri Venkatesan