தமிழ்நாட்டில் இன்று 1,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோயில்களில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சென்னையில் மக்கள் அதிகம் கூடும் தி.நகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட 9 பகுதிகளில் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,63,544 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 28 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 34,130 ஆக அதிகரித்தது. சிகிச்சையில் இருந்த 2,068 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை நலம்பெற்றவர்கள் எண்ணிக்கை 25,09,029 ஆக அதிகரித்தது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 20,385 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட வாரியாக கோவையில் 219, ஈரோட்டில் 168, சென்னையில் 189, செங்கல்பட்டில் 127, தஞ்சையில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மற்ற மாவட்டங்களில் 100 கீழாகவே பாதிப்பு பதிவாகியுள்ளது.







