முக்கியச் செய்திகள் கொரோனா

இன்று ஒரே நாளில் 1,575 பேருக்கு கொரோனா 

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,575 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரடங்கில் பெரும்பாலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், சில கட்டுப்பாடுகள் மட்டும் தொடர்ந்து வருகின்றன. எனினும் கொரோனா தொற்று பரவல் தினசரி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,575 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,21,086 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, 16,315 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 20 பேர் இன்று உயிரிழந்தனர். மொத்த கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 35,000 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 1,610 பேர் கொரோனாவிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை பூரண நலம் பெற்றவர்களின் எண்ணிக்கை 25,69,771 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டங்களைப் பொறுத்தவரை சென்னையில் 167, கோவையில் 244, ஈரோட்டில் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100 பேருக்கு கீழாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

தமிழக அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு

Saravana Kumar

மதுரை ஆதரவற்றோர் முகாமில் மாயமான குழந்தைகள் உயிருடன் மீட்பு

Ezhilarasan

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,293 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

Ezhilarasan