முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

நடிகர் சுதீப் பிறந்தநாளுக்கு மாட்டை பலிகொடுத்த விவகாரம்; 25 பேர் மீது வழக்குப் பதிவு

கன்னட நடிகரான சுதீப் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான நான் ஈ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். மேலும், அந்த படத்தில் அவரது நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. இவர் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாணவ மாணவிகளின் கல்வி செலவு, ஏழை எளிய மக்களுக்கு உதவுதல் போன்ற சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால், இவருக்கு அதிகளவில் ரசிகர் பட்டாளம் உள்ளனர். இந்நிலையில், இவர் கடந்த 2ம் தேதி தனது 50வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி பெல்லாரி மாவட்டம் சந்தூர் பகுதியில் அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி அவரது பிறந்தநாளை கட் அவுட் வைத்து கொண்டாடினர். அப்போது சிலர் அங்கு எருமை மாட்டை அழைத்து வந்து கொடூரமாக மாட்டை வெட்டி அதன் ரத்தத்தை கட் அவுட் மேல் தெளித்தனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அந்த தொடர்புடைய சுமார் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

 

 

Advertisement:
SHARE

Related posts

விவசாயிகள் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு ரூ.2,400 கோடி இழப்பு!

Jayapriya

ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறும்; ஜோ பைடன்

Saravana Kumar

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை

Halley karthi