தமிழ்நாட்டில் புதிதாக 3,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 3,867 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 330 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,867 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 96 ஆயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றில் இருந்து 4 ஆயிரத்து 382 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 27 ஆயிரத்து 988 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,005 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். 481 பேர் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். ஈரோட்டில் 349 பேருக்கும் சேலத்தில் 245 பேருக்கும் கோவையில் 445 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.







