முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் இன்றும் குறைந்தது கொரோனா பாதிப்பு!

மிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 763 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 30 ஆயிரத்து 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்த 31 ஆயிரத்து 759 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இதையடுத்து, இதுவரை 20 லட்சத்து 39 ஆயிரத்து 716 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, 3 லட்சத்து 10 ஆயிரத்து 157 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 31 ஆயிரத்து 759 பேர் குணமடைந்து கடந்த 24 மணி நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 17 லட்சத்து 06 ஆயிரத்து 298 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக, ஒரே நாளில் 486 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை, 23 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 2705 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 85 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர். 5327 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். செங்கல்பட்டில் 1314 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 711 பேருக்கும் திருவள்ளூரில் 1072 பேருக்கும் திருச்சியில் 1099 பேருக்கும் கோவையில் 3692 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

Advertisement:

Related posts

சிட்லபாக்கம் ராஜேந்திரன் தறி நெய்து வாக்கு சேகரிப்பு!

Karthick

ஐடியா சொன்னார் சாமியார்: திருப்பதி மலையில் புதையலுக்காக சுரங்கம் தோண்டிய 3 பேர் கைது!

Karthick

கொரோனா தடுப்பூசி : சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது

Niruban Chakkaaravarthi