முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் புதிதாக 1,592 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,592 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 583 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,592 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் இதுவரை 26 லட்சத்து 22 ஆயிரத்து 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற் றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 607 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25 லட்சத்து 71 ஆயிரத்து 378 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந் தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 018 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 165 பேருக்கு புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 148 பேர், கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் 229 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. செங்கல்பட்டில் 127 பேருக்கும் ஈரோட்டில் 104 பேருக்கு புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ திட்டம்!

Halley karthi

மாணவியிடம் பாலியல் சீண்டல்: தனியார் உடற்பயிற்சி ஆசிரியர் மீது வழக்கு!

Vandhana

குழந்தை விற்பனை வழக்கு; ஜாமீன் மறுப்பு

Saravana Kumar