முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

இன்ஸ்டா பழக்கம்: விமானப் பணிபெண் பலாத்காரம், மாணவர் கைது

மயக்க மருந்து கொடுத்து விமானப் பணிப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பொறியியல் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வேஜல்பூரை சேர்ந்தவர் அந்த 22 வயது இளம் பெண். விமானப் பயிற்சிப் பணிபெண்ணாக பணியாற்றி வருகிறார். இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த அஜித் திவேதி என்ற பொறியியல் மாணவர் இன்ஸ்டாகிராமில் பழக்க மானார். ஒரே பகுதி என்பதால், முதலில் புகைப்படங்களையும் பிறகு போன் நம்பரை யும் ஷேர் செய்துகொண்டனர். ஒரு நாள், நேரில் சந்திக்கலாமே என்று கூறியிருக்கிறார் அஜித் திவேதி. இருவரும் சந்தித்திருக்கிறார்கள்.

இதையடுத்து தனது வீட்டில் ஆளில்லாத நாளில் விமானப் பணிப்பெண்ணை அழைத்திருக் கிறார் திவேதி. சென்றார் அந்தப் பெண். அப்போது அவர் நட்பாக கொடுத்த குளிர்பானத்தை மறுக்காமல் குடித்தார் இளம் பெண். அதற்கு பிறகு அவருக்குத் தலைசுற்ற ஆரம்பித்தது. பின்னர் அவர் மயங்கிவிட்டார்.

இதை எதிர்பார்த்த அந்த மாணவர் அவரை பாலியல் வன்கொடுமை செய்து அதை செல் போனில் வீடியோவாக பதிவு செய்துகொண்டார். மயக்கம் தெளித்த அந்தப் பெண், நிலைமை புரிந்து அவரை திட்டிவிட்டு சென்றார். இந்தச் சம்பவம் நடந்தது கடந்த ஏப்ரல் மாதம். பிறகு செல்போன் பதிவு செய்த வீடியோவை காட்டி மிரட்டியே, அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் அந்த மாணவர். அவர் மறுத்தபோதெல்லாம் அவரை அடித்து துன்புறுத்தினாராம்.

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், அந்த விமானப் பணிப்பெண், போலீசில் புகார் செய்தார். போலீசார், இன்ஜினீயரிங் மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

Advertisement:
SHARE

Related posts

என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை: சூரப்பா விளக்கம்

Halley karthi

இத்தனை ஆண்டுக்கால பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன் – சசிகலா

Halley karthi

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: அரசு அறிவிப்பு

Halley karthi