கடந்த 24 மணி நேரத்தில் 53,480 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41,280 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,480 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பானது 1,21,49,335 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,14,34,301 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 5,52,566 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 354 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,62,468 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் 6.1 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். மேலும், 6.4 கோடி தடுப்பூசிகள் 84 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 12.76 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7.23 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 5.24 கோடி பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் இந்தியா உலக நாடுகளுக்கு உதவும் விதமாக தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவை பொறுத்த அளவில் 6.1 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை நாடு முழுவதும் 6,30,54,353 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







