முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளிகள் திறப்பு: நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

செப்டம்பர் 1-ஆம் தேதி 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பினருக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 50 சதவிகித மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும், வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. வாரத்தில் 6 நாட்களுக்கு பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும், ஆன்லைன் வகுப்பில் மட்டும் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு பள்ளிகள் அனுமதி தர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் வெப்பநிலை பரிசோதனை, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி தெளித்து அடிக்கடி சுத்தம் செய்தல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், கூட்டம் சேராமல் தடுத்தல் போன்றவை கட்டாயமாகp பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டை பயன்படுத்தக் கூடாது, ஆசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் விளையாட்டு, இறைவணக்கக் கூட்டம், நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்றும்,
மாணவர்களின் மனநலன், உடல்நலனை சோதிக்க மருத்துவர் அல்லது செவிலியர் முழு நேரமாக பள்ளியில் இருக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

டிராக்டர் கலப்பையில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

Jayapriya

டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பயணத் திட்டம்!

Jeba Arul Robinson

நாராயணசாமி அரசின் பயணம் அன்று முதல் இன்றுவரை!

Gayathri Venkatesan