மின் நிலையங்கள் மற்றும் மின்மாற்றிகளில் உடனடி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு சரகத்திற்கும் தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மின் நிலையங்களில் கடந்த 9 மாதங்களாக முறையான பராமரிப்பு பணி நடைபெறாத காரணத்தினால் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படட்டுள்ளது. இந்த மின்வெட்டை தடுக்க 10 நாட்கள் தீவிர பராமரிப்பு பணியை மேற்கொள்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம். இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு சரகத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நுகர்வோரின் குறைகளுக்கு மூன்று நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். எந்த விண்ணப்பத்தையும் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. நுகர்வோரின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுவதை தலைமைப் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் மின்சார வாரிய விநியோக இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நுகர்வோரின் குறைகளுக்கு உரிய காலத்தில் தீர்வு வழங்காவிட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போருக்கும் 3 நாட்களுக்குள் இணைப்பு வழங்கிட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







