முக்கியச் செய்திகள் செய்திகள்

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து, சட்டசபை தேர்தல்: பிரதமரிடம் குலாம்நபி ஆசாத் வைத்த 5 கோரிக்கைகள்!

ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் உள்ளிட்ட பணிகளைத் தொடங்குவது தொடர்பாக பிரதமர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஐந்து கோரிக்கைகளை முன் வைத்ததாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு- காஷ்மீரில் அரசியல் சட்டம் 370 பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து முக்கிய ஆலோசனைகளை நடத்த இந்தக் கூட்டம் நடைபெற்றது.
பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் ஆளுநர், முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் உள்பட 14 அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின் குலாம் நபி ஆசாத், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் ஐந்து கோரிக்கைகளை வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், சட்டசபை தேர்தல் நடத்துதல், காஷ்மீரி பண்டிக்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அமைத்தல், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல்,
ஜம்மு-காஷ்மீர் குடியேற்ற விதிகள் ஆகிய கோரிக்கைகளை இந்த கூட்டத்தில் நாங்கள் முன்வைத்தோம்.

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தாரர் என்று தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

“ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா மீது யாரும் குற்றஞ்சாட்டவில்லை”

Gayathri Venkatesan

“விவாதிக்க துண்டு சீட்டு இல்லாமல் வரத் தயாரா?”- மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் சவால்!

Jayapriya

மூச்சுக்குழாயில் சிக்கும் உணவுப் பொருட்களை அறுவை சிகிச்சையின்றி அகற்றி தருமபுரி மருத்துவர்கள் சாதனை!

Jayapriya