முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தடுப்பூசி குறித்து அதிமுக விமர்சிப்பது ஆச்சரியமாக உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதிமுக தடுப்பூசி குறித்து விமர்சிப்பது ஆச்சரியமாக உள்ளதென அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

பொது சுகாதாரத் துறை மற்றும் யுனிசெப் இணைந்து நடத்தும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை  சுகாதாரத் துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன் திருவான்மியூரில் இன்று  கொடியசைத்து துவக்கி வைத்தார். கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் காய்கறி, மீன் மார்க்கெட் பகுதிகளில் இந்த வாகனம் செயல்பட உள்ளது. 

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் 2ம் அலை முற்றுக்கு வருகிறது என்ற நிலை இருந்தாலும், மக்களை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்துவது அரசின் கடமை, அதன் ஒரு பகுதியாக இன்று சென்னையில் 10 வாகனங்கள்  மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளும் பணி தொடங்கி வைக்கப்பட்டது என்றார். 

கொரோனா பேரிடரால் ஏற்படும் பாதிப்பு, அதில் இருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகள் குறித்தும் இதில் அறிவுறுத்தப்படும் என்ற அவர், தடுப்பூசி தான் கொரோனா தொற்றுக்கு ஒரே தீர்வு என்ற அடிப்படையில் அதுகுறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கொள்கிறோம் என்று கூறினார். 

அதிமுக ஆட்சியில் நாள் ஒன்றுக்கு சரியாக 61 ஆயிரம் பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டது எனவும், திமுக ஆட்சியில்  நாள் ஒன்றுக்கு  1.34 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகிறது என்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அதிமுக தடுப்பூசி குறித்து விமர்சிப்பது ஆச்சரியமாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. செங்கல்பட்டில் எச்எல்எல் நிறுவனம் எங்குள்ளது என ஓபிஎஸுக்கு தெரியுமா” எனக் கேள்வி எழுப்பினார். 

“தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற நான்கு மாவட்டங்களில் 10 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை கூடி உள்ளது. சிறிய அளவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்படும், நானும் நேரில் சென்று ஆய்வு செய்வேன்” எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். 

Advertisement:
SHARE

Related posts

இடம் மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள்!

Halley karthi

ஹெல்மெட் அணியாமல் பேருந்து ஓட்டியதாக அபராதம்… அதிர்ந்த உரிமையாளர்!

Saravana

தமிழர்கள் பாதுகாப்பாக இருங்கள்: பிராவோ!