தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக-விற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் திமுகவின் உதய சூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் மதிமுக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மதிமுக-விற்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”2026, ஏப்ரல் திங்களில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான சீர்காழி (தனி) தொகுதியிலும் கழக வேட்பாளர் வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதை தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







