முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 3,479 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,479 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 3 ஆயிரத்து 481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றில் இருந்து 3 ஆயிரத்து 855 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 35 ஆயிரத்து 872 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,132 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். 368 பேர் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனர்.

 

Advertisement:
SHARE

Related posts

வீடுதோறும் காய்ச்சல் கண்காணிப்பு பணி திவீரப்படுத்தப்படும்: சென்னை ஆணையர் பிரகாஷ்

இந்தியா ஒருபோதும் சதிசெயல்களை அனுமதிக்காது: பிரதமர் நரேந்திர மோடி!

Jayapriya

கொரோனா நிதியாக ரூ.1 கோடி வழங்கிய எர்ணாவூர் நாராயணன்

Gayathri Venkatesan