முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அக்.31 வரை தடை

கொரோனா தொற்று நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திருவிழாக்கள் அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுமக்கள் நலன்கருதி அதிகப்படியான பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை தொடரும் என்றும், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3வது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் சிறப்புக் குழு அறிக்கை அளித்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3வது அலை உருவாவதை தடுக்க பொதுமக்கள் பண்டிகைகளை தங்களது இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், பொது போக்குவரத்தை அவசியத்திற்காக மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும், கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று மேலாண்மைக்கான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது கண்காணிக்கப்பட்டு விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு தொடர்ந்து அபாராதம் விதிக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு

Niruban Chakkaaravarthi

காஞ்சிபுரம் அருகே விஷவாயு தாக்கி 3 துப்புரவு பணியாளர்கள் பலி

Jayapriya

திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்திற்கு மாற்றம் தேவை – சரத்குமார்

Gayathri Venkatesan