முக்கியச் செய்திகள் இந்தியா

பெண் ஆளுமைக்கான விருதை பெற்றார் தமிழிசை!

உலகின் தலைசிறந்த 20 பெண் ஆளுமைகளில் ஒருவராக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்கா எம்.பி டேனி கே. டேவிஸ் தலைமையில் செயல்பட்டு வரும் ‘Multi Ethnic Advisory Task Force’ என்ற அமைப்பின் சார்பில் 9-ம் ஆண்டு விருது வழங்கும் விழா அமெரிக்காவில் நேற்று நடைபெற்றது.
இவ்விருது நிகழ்வில் தமிழிசை சௌந்தரராஜன் காணொலி காட்சி மூலம் புதுச்சேரியில் இருந்து கலந்துகொண்டார்.

பெண்கள் உரிமை, பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி செயல்பட்டதற்காக தமிழிசை சௌந்தரராஜனுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழிசையுடன் சேர்ந்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் உலகின் தலைசிறந்த பெண்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் இவ்விருதை பெற்றுக்கொண்டனர்.

Advertisement:

Related posts

மகளை காப்பாற்றுவதற்காக கடலில் இறங்கிய தந்தை உயிரிழப்பு!

Jayapriya

பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தேர்தல் பரப்புரை!

Gayathri Venkatesan

ராஜஸ்தானில் 15 நாள் ஊரடங்கு: திருமணங்களுக்கும் தடை!

Karthick