முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை; கணவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

தேனியில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி மாவட்டம் எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ஐயப்பன் – தமிழ்செல்வி தம்பதியினர். இவர்களுக்கு 2017 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழ்செல்விக்கு அவரது தந்தை வீட்டில் வரதட்சணையாக 17 பவுன் தங்க நகையும் மற்றும் சீர்வரிசையும் கொடுத்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குடிப்போதைக்கு அடிமையான ஐயப்பன் தமிழ் செல்வியிடம் தகராறு செய்து வந்த அவர், தனது மனைவியின் தங்க நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை அடகு வைத்து குடித்து அழித்துள்ளார்.

பின்னர், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் இழக்கவே மீண்டும் தமிழ்ச் செல்வியிடம் வீட்டிற்கு சென்று அவர்களது பெற்றோரிடம் பணம் வாங்கி வரச் சொல்லி அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த தமிழ்ச்செல்வி ஐயப்பன் கண் எதிரிலே மண்ணெண்ணையை குடித்து தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். அதை தடுக்காமல் மண்ணெண்ணையை தலையில் மற்றும் உடலில் ஊற்றி தீ வைத்தால்தான் தற்கொலை செய்து கொள்ள முடியும் என தமிழ்ச்செல்வி இடம் ஐயப்பன் கூறியுள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வி தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பின்னர் மகளின் தற்கொலையில் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், ஐயப்பன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறுதியில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஐயப்பனுக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த பிரமுகர்கள்

Arivazhagan Chinnasamy

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூ.3 கோடி ஊக்கப்பரிசு:முதலமைச்சர்

தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் – பொன்முடி

EZHILARASAN D