புதுச்சேரியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் மகாத்மா காந்தியின்
பிறந்த நாள் மற்றும் காமராஜரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனைத் தொடர்ந்து காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு காமராஜர் சதுக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்துவது மிகவும் தவறு என்றும் செயற்கையாக மின்வெட்டை ஏற்படுத்தும் ஊழியர்கள் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்றும் தெரிவித்தார்.
இதேபோல் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்,
மின்வெட்டு ஏற்படுத்திய மின்துறை ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுள்ள
நிலையில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் இன்று மதியத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தார். மேலும் அனைத்து துணை மின் நிலையங்களும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.