புதுச்சேரியில் 80% தடுப்பூசி போடப்பட்டுள்ளது : தமிழிசை சவுந்தர்ராஜன்

புதுச்சேரியில் தொடர்ந்து முயற்சி செய்ததன் காரணமாக, 80% தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: புதுச்சேரியில் இன்னும் இரண்டரை லட்சம் பேர் தடுப்பூசி…

புதுச்சேரியில் தொடர்ந்து முயற்சி செய்ததன் காரணமாக, 80% தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: புதுச்சேரியில் இன்னும் இரண்டரை லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. 25ஆம் தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை புதுச்சேரி முழுவதும் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட உள்ளது. 2 வது அலை இன்னும் ஒரு சில பகுதிகளில் உள்ளது. பெருந்தொற்றில் இருந்து நம்மை காக்க தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும்.

விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி சான்று கேட்கின்றனர். நாட்டின் பாதுகாப்பிற்காக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானது. பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுமதி அளித்த பின்னர், 2 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். அதிகப்படியான பரிசோதனை செய்வதில் புதுச்சேரி மாநிலமும் ஒன்று.

பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது, நவம்பர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி கல்வித்துறை செய்துள்ளது. இவ்வாறு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.